நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப் படுத்தி வருகின்றன. இதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. பேராசிரியர்களுக்கும் மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது.