Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“1 யூனிட் கரண்ட் சார்ஜ் செய்தால்” 50 கி.மீ செல்லும் சைக்கிள்…. பெட்ரோலுக்கு பை சொன்ன இளைஞர்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர் பாஸ்கரன். இளைஞரான இவர் ஒரு யூனிட் மின்சாரத்தை வைத்து 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்த இவர் பத்து வருடத்திற்கு மேலாக பேட்டரி மூலம் இயங்க கூடிய ஒரு புதிய சைக்கிளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதில் பல்வேறு தோல்விகளைக் கண்ட பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால், 50 கிலோ மீட்டர் செல்லும் அளவிற்கு சைக்கிளை தற்போது வடிவமைத்துள்ளார்.

இதில் 24 வோல்ட்டேஜ், 18AH திறன் கொண்ட பேட்டரி பொருத்தியுள்ளார். அதேபோல 250 வாட்ஸ் மற்றும் 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டார்களையும் பயன்படுத்தி உள்ளார். மேலும் இந்த சைக்கிளை செய்து முடிப்பதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த சைக்கிளை அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மோட்டாரில் இயங்கும் போது தேவைப்படும் போது நாமும் பெடல் செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என்பது இதனுடைய சிறப்பம்சம் ஆகும். இவருடைய இந்த கண்டுபிடிப்பிற்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

Categories

Tech |