தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் பலரும் இணையதளத்திலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வேடிக்கையான சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் குரங்கு குட்டி ஒன்றுடன் வாத்து குஞ்சுகள் நட்பு பாராட்டி விளையாடும் விடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் குரங்கும் வாத்து குஞ்சுகளும் ஒன்றாக விளையாடுகிறது, படுத்து உறங்குகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1417476533531385861