Categories
தேசிய செய்திகள்

என்னது… “ஒரு கிலோ மீனு 17 ஆயிரமா”…? ஏன் இவ்வளவு விலை தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் கிடைக்கும் புலாசா என்ற மீன் கிலோ 17 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இதில் பார்ப்போம்.

நம் முன்னோர்கள் பல பழமொழிகளை நமக்கு கூறியுள்ளார்கள். அதேபோல தெலுங்கிலும் பல பழமொழிகள் பிரபலமாக உள்ளது. அதில் ஒன்று ‘புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி’ என்ற பழமொழி. அப்படி என்றால் தாலியை விற்றாவது புலாசா மீனை சாப்பிட வேண்டும் என்பதுதான். கோதாவரி ஆற்றில் கிடைக்கும் இந்த மீன் மிகவும் அரிய வகையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக கோதாவரி ஆற்றில் மட்டும் குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் இந்த மீன்கள் கிடைக்கும். இந்த மீன் ஒரு கிலோ 5 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அந்த காலத்தில் மீன்கள் எவ்வளவு விலை கிடைத்தது என்பது தெரியவில்லை.

ஆனால் தற்போது இதன் விலை தாறுமாறாக உள்ளது. இந்த மீன்கள் இந்தியாவில் இங்கு மட்டும் கிடைக்கும் என்பதால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த மீனை வாங்கி வருகின்றனர். இதை வாங்குவதற்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் இந்த மீன் பிடிக்கப் பட்டு கரையிலேயே விற்பனை செய்யப்பட்டு விடுவதால், மார்க்கெட்டுக்கு வருவது என்பது மிகவும் அரிதாக உள்ளது, அந்த அளவுக்கு இந்த மீன் டிமாண்டாக இருக்கின்றது.

Categories

Tech |