இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் விஜயின் குட்டி கதை தான். ஆம் நடிகர் விஜய் தனது படத்தின் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதை சொல்லி ரசிகர்களை ஆரவாரபடுத்துவார்.
அதே போன்று பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் குட்டிக்கதை கூறுவார் என்றும் அவரது பேச்சை கேட்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் பேசியதாவது, என்னோட போட்டோவை நீங்க அவமான படுத்துங்க என்ன வேணுமானாலும் செய்துகொள்ளுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது மட்டும் கை வச்சீங்க….. என்று கூற ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். போன முறை சர்க்கார் படத்தில் இவரது பேனர்களை அதிமுக நிர்வாகிகள் சேதப்படுத்தியது குறித்து இவர் பேசியிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.