Categories
மாநில செய்திகள்

குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை… வெளியான தகவல்…!!!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்குவதற்கும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுவரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |