Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீ இந்த வழியா போகக்கூடாது…. குடும்பத்தினரின் தகறாறு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

நிலத்தகராறு பிரச்சினையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் அப்துல்லத்தீப் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் அன்சார் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நஸ்ரின் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்துல்லத்தீப்க்கும், அன்சார் அலிக்கும் சொந்தமான பூர்வீக நிலம் மேலாயூர் கிராமத்தில் உள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பாதை சம்பந்தமாக நிலத் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் அப்துல்லத்தீப் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது அன்சார் அலியின் மனைவி நஸ்ரின் பாத்திமா, காதர் இப்ராகிம், சேட் மற்றும் ஷேக்சுல்தான் ஆகியோர்  இந்த வழியாக செல்லக்கூடாது என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்துல்லத்தீப் இளையான்குடி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நஸ்ரின் பாத்திமா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |