பிகில் படத்திற்கான ஆடியோ லான்ச் இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்கள் வெகுவாக திரண்டு சென்று விஜய்யின் பேச்சை கேட்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பிகில் ஆடியோ லான்ச் என்ற HASHTAGஐ ட்ரெண்ட் ஆக்கியும் உள்ளனர். இதுவரையில் இந்த HASHTAGஇல் 1.54 மில்லியன் ட்விட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பரியேறும் பெருமாள் படத்தின் கதாநாயகனான கதிர் உள்ளிட்டோர் பேசினர்.
இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசினார். அவர்பேசியதாவது, சாலை விபத்தில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ இன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மரணம் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்ததோடு, பேனர் வைத்த குற்றவாளி மீது கோபப்படாமல் லாரி டிரைவர் மீதும், பேனர் டிசைன் செய்த கடைக்காரர் மீதும் கோபம் கொண்டு நடவடிக்கை எடுப்பது சரிதானா? இதையெல்லாம் நீங்கள் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தால் நன்றாக இருக்கும். சமூக பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள் நண்பா என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.