மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக கூடியுள்ளனர்.
5 பைசாவுக்கு இலவசமாக பிரியாணி கிடைப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை மறந்து கடை முன்பு கூட்டம் கூடியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியாணி கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்ட 5 பைசாவுக்கு விற்ற பிரியாணி கடைக்கு சீல் வைத்து மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.