Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காகத்தான் சுத்திட்டு இருக்கிங்களா…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கீழவளவு பகுதியில் வசிக்கும் அழகர் மற்றும் அய்யனார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் அலங்காநல்லூர், கல்லல், திருமயம் ஆகிய பகுதிகளில் தனியாகச் சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |