ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்லதுரையை சில பேர் இணைந்து கொலை செய்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெனிபா, சிலம்பரசன் உட்பட 32 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லதுரை கொலை செய்ததற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் வசிக்கும் வசூர் ராஜா என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனால் காவல்துறையினர் வசூர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
இந்நிலையில் துணை போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்பவர்கள் இணைந்து போலீஸ் கமிஷனரிடம் வசூர் ராஜாவின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து இது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோர் என்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனரான நஜ்மல்ஹோடா என்பவர் வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அதனை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.