பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை செய்தனர். அதாவது நாகர்கோவில், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காப்பட்டணம், ஆளூர், கன்னியாகுமரி, திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், இரவிபுதூர்கடை போன்ற பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்துள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலை பொறுத்தவரை கோட்டார், இடலாக்குடி, வடசேரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதன் பின் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் வெளியூர்களில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக பக்ரீத் வாழ்த்துக்கள் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். இதனைதொடர்ந்து தொழுகை முடிந்ததும் முஸ்லீம்கள் வீடுகளில் சுவையான பிரியாணி சமைக்கப்பட்டு பக்கத்து வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ந்தனர். இதேபோன்று இந்த மாவட்டத்தில் ஒரு பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று முன்தினமே பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.