Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை அடிச்சுட்டான்…. தொழிலாளியின் தவறான முடிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோள் அப்பட்டுவிளையில் ரெங்கசாமி என்ற தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரெங்கசாமியுடன் சுபாஷ்  தகராறு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரெங்கசாமிக்கு உள் காயம் ஏற்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு சென்று படுத்து தூங்கினார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு ரெங்கசாமியை அவருடைய மனைவி எழுப்பியபோது எழும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் ரெங்கசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரெங்கசாமி உடல் பிரேத பரிசோதனை முடிவில் அவர் திராவகம் குடித்து இருந்ததாகத் தெரிகின்றது. இதனைதொடர்ந்து தம்பி மகன் அவரை தாக்கியதால் மனவேதனை அடைந்த ரெங்கசாமி தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு ரெங்கசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷ் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |