கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.
கன்னியாகுமரியின் சுற்றுலா தலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து படகில் சென்று கடல் நடுவில் இருக்கின்ற விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி கடலில் குளித்தல், படகில் செல்லுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வாகனங்களில் வந்து திரண்டனர்.
அவர்கள் காலை சூரியன் உதிப்பதை பார்த்து மகிழ்ந்து பின் பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் போன்றவற்றிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் திறந்திருந்தது. அதன்பின் அங்கும் பலர் சென்று ராமாயண காட்சிகளை பார்த்துவிட்டு பின் மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் கண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு மாலையில் பெற்றோருடன் வந்த சிறுவர்-சிறுமிகள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.