தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது.
இதையயடுத்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.