தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைவான மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணம் ஆகும். இதில் ஒருசில கேபிள் ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, அரசு செட்ஆப் பாக்ஸை வழங்காமல் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆபரேட்டர்களும், அதிகாரிகளுமே பொறுப்பு. மேலும் அரசிடம் ஒப்படைக்காமல் உள்ள செட்டாப் பாக்ஸ் திரும்ப ஒப்படைக்க விட்டால் அந்த செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை விரைவில் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.