Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 8 மாதத்தில்…. கணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணம் முடிந்த 8 மாதத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திலீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் திவ்யா என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திலீபன், திவ்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் மருத்துவரான திவ்யா புள்ளானேரி பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை, அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின் மீண்டும் திலீபனின் குடும்பத்தினர் திவ்யாவை அழைத்துவர கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு உறவினர்களுடன் சென்றுள்ளனர். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திலீபன் தனது வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலீபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திலீபனின் தாயார் தமிழ்தேவி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |