உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் 85 பேருக்கு ககொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தம்பாதிப்பு 87 ஆக உயர்ந்துள்ளதாக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது. விளையாட்டு வீரர்ளில் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.