நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாஷ்டாக் 16 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.இது குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களது ஆனந்த களிப்பை தொடங்கினர். குறிப்பாக #BigilAudioLaunch என்ற ஹாஷ்டக்குகளில் ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.
மேலும் இதில் பேசிய நடிகர் விஜய் பல்வேறு கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசினார். முழுவதும் அரசியல் பேட்சாக இருந்த நடிகர் விஜயின் கருத்து பலரையும் கவ்வி பிடித்தது. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி விஜய் பேசியதை பலரும் ஆதரித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் #BigilAudioLaunch என்ற ஹாஷ்டக்கில் 16, லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவிடப்பட்டு இந்தியளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.