லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு பகுதியில் ஜீனை அகமது, ஆதில் என்பவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து பேரணாம்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது செட்டியப்பனுர் கூட்ரோடு அருகில் வாலிபர்கள் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகின்றது.
இதில் தூக்கி எறியப்பட்ட ஜீனை அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காயமடைந்த ஆதில் என்பவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.