ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி, சிறையிலிருந்து 5,000 தலீபான் பயங்கரவாதிகளை விடுவித்தது மிகப்பெரும் தவறு என்று கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசபடையினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டது. இதனால் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான பகுதிகளை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில் நேற்று, காபூல் நகரில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடந்தது.
அப்போது, பொதுமக்களிடம் பேசிய அதிபர், “தலீபான் பயங்கரவாதிகளிடம் அமைதியை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையினால், 5,000 தலீபான் பயங்கரவாதிகளை சிறையிலிருந்து விடுவித்தேன். அது மிகப்பெரும் தவறு. அந்த முடிவு தான் அவர்களை பலமாக்கிவிட்டது. எனினும் தற்போது வரை அவர்கள் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.