Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்குதொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |