Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. புதுசு புதுசா உருவாகியது…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

தொடர் மழையின் காரணமாக புதிது புதிதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகளினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம், காப்புக்காடுகள் இருக்கின்றது. இந்த காப்புக் காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள் கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்துக்கு தெற்கே ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியில் 10 அடி கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர் கொட்டுகின்றது. இந்த நீர்வீழ்ச்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. இதில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள்-சிறுமிகள் வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் மட்டும் இன்றி வார நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதேப்போன்று பொம்மகெடா நீர்வீழ்ச்சி உள்ள மலையின் கிழக்கில் திம்மகெடா  நீர்வீழ்ச்சி இருக்கின்றது. இந்த நீர் வீழ்ச்சியிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இவ்வாறு தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி அருகில் தொடர்ந்து புதிது புதிதாக நீர்விழ்ச்சி உருவாகி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |