இந்தோனேஷியாவில் விமானத்தில் வேடமிட்டு மனைவியை போன்று பயணித்த கணவன் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் சமீபத்தில் Citilink விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் ஆணாக மாறி உடை அணிந்து வந்துள்ளார். இதுகுறித்து விமான பெண் ஊழியர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் Ternate விமானநிலையத்தில் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் விமானத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்ததை மறைத்து அவருடைய மனைவியின் PCR சான்றிதழை பயன்படுத்தி வேடமிட்டு விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவர் விமானத்திலிருந்து தரையிறங்கும் இடம் வந்துவிட்டதால் ஆடையை மாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.