Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100% பள்ளிக்கு வரவழைக்க…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 10,11ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை 100% பள்ளிக்கு வரவழைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். பாட குறிப்பேடு மற்றும் செயல் திட்ட குறிப்பேடுகள் தினமும் எழுதி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

Categories

Tech |