Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஒன்று இந்தியாவில் இருந்ததே இல்லை…. சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சனம்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏராளம். ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை அரசு செய்து கொண்டே வருகிறது. அதனால் பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில்,ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனில் மருத்துவமனைகள் உயர் நீதி மன்றங்களை நாடியது ஏன்? இன்னும் சிறிது காலம் சென்றால் கொரோனா ஒன்று இந்தியாவில் இருந்ததே இல்லை என மத்திய அரசு தெரிவிக்கும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |