இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த ஈஸ்வரி சில நாட்களாக பெற்றோர், உறவினர்கள் யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் ஆனந்த ஈஸ்வரிடம் கேட்டபோது அவள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனையடுத்து ஆனந்த ஈஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின் வீடு திரும்பிய கால்நடை மருத்துவர்கள் ஆனந்த ஈஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்த ஈஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாழையூத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.