காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் தனது மனைவியுடன் வாழ மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி பகுதியில் சத்யா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவிற்கும் இரும்பாலை பகுதியில் வசிக்கும் போலீஸ்காரரான சதீஷ்குமார் என்பவருடன் முகநூல் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சதீஷ்குமார் சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதனால் சத்யா, சதீஷ்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தியாதால் அவரை மருதமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சத்யா, சதீஷ் குமாரிடம் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் தன்னுடைய தங்கைக்கு திருமணம் முடிந்த பிறகு உன்னை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமாரின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த சத்யா, சதீஷ்குமாரிடம் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சத்யா உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலீஸ்காரரான சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.