நடிகர் அருள்நிதியின் 15-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி . இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைரி, தேஜாவு உள்ளிட்ட சில திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் டைரி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
#DBlock #DBlockFirstLook @VijayKRajendran @SakthiFilmFctry @sakthivelan_b @MNM_Films @AravinndSingh @Avantika_mish @RonYohann @thecutsmaker @DoneChannel1 pic.twitter.com/FlO0GnXEnh
— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 21, 2021
இந்நிலையில் அருள்நிதியின் 15-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. எரும சாணி யூடியூப் சேனல் பிரபலம் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ‘டி ப்ளாக்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரான் எதான் யோகன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.