Categories
உலக செய்திகள்

இது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரும்…. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி…. ஆய்வின் முடிவை வெளியிட்ட அறிவியலாளர்கள்….!!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் ஐரோப்பா உட்பட பல நாடுகள் இதனை செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதில் கோவிஷீல்டு தடுப்பூசியை ஒரு மனிதன் செலுத்திக் கொள்ளும்போது அவனுக்குள் கொரோனா வைரஸிற்கு எதிராக எதிர்ப்பு அணுக்களை இந்த தடுப்பூசி உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்கள் மேலும் இந்த கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொற்றிலிருந்து பாதுகாப்பது தருவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

Categories

Tech |