வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபஜார் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட இருப்பதாகவும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் ஒரு வீட்டில் மூட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பதும், இவர் மீது இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, பார்த்திபனை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.