Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை….!!!!

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துகளை சேர்த்ததாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்களத்தூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Categories

Tech |