சென்னையில் பம்மல் திருவள்ளூர் தெருவில் வசித்து வந்த புஷ்ப லக்ஷ்மி என்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவை விரட்ட புகை போட்டுள்ளார். அதிகமாக புகை போட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மயங்கிக் கிடந்த முதியவர் மற்றும் சிறுவன் உட்பட 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Categories