பெண் போலீசிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பணி முடிந்து இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்தார்.
இதனை அடுத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐஸ்வர்யாவிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.