நெரிசலில் சிக்கி சுமார் 60 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏராளமான செம்மறியாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சண்முகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பஜார் பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் டிரைவர் ஆடுகள் ஒதுங்கி செல்வதற்காக அதிக சத்தத்துடன் ஒலியை எழுப்பியுள்ளார். இதனால் ஆடுகள் ஒன்றன் மீது ஒன்றாக ஏறிச் சாலையை முயன்றுள்ளது.
அப்போது நெரிசலில் சிக்கி சுமார் 60 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனைப் பார்த்த சண்முகம் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்துள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேலப்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.