Categories
தேசிய செய்திகள்

SWEET NEWS: பணத்தை எடுத்துக்கொள்ளலாம்… சற்று முன் வெளியான வாவ் அறிவிப்பு…!!!

தேசிய பென்ஷன் திட்டத்தில் பென்சன் கணக்கிலிருந்து பணம் எடுக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா காலகட்டத்தில் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல வழிகளை தேட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை என்றும், சுய அறிவு மூலம் பென்ஷன் திட்ட கணக்கில் இருந்து 25 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

பென்ஷன் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வீடு, திருமணம், மருத்துவம் சார்ந்த எந்த ஆதாரங்களும் தேவையில்லை என நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரிட்டயர்மென்ட் பணத்தை எடுப்பதற்கு வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பென்சன் நிதியில் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் Annuity வாங்காமலேயே மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |