மூன்று ரபேல் வகை போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது.
ரபேல் வகை போர் விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறது. இதற்கிடையே ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 விமானங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி வாங்கப்படுகிறது. மேலும் இதுவரை இந்தியாவுக்கு 21 விமானங்கள் கொண்டுவரப்பட்டதோடு அவை அனைத்தும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று பிரான்சிலிருந்து மூன்று ரபேல் போர் விமானங்கள் ஏழாவது முறையாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன.
அந்த விமானங்கள் இந்தியாவிற்கு 8,000 கிலோ மீட்டர் தூரத்தை இடை விடாமல் கடந்து வந்துள்ளது. இதற்கிடையே அரபு எமிரேட்ஸ் அந்த விமானங்கள் இடைவிடாமல் பறந்து வந்த போது நடுவானில் எரிபொருளை நிரப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த 3 விமானங்களையும் சேர்த்து இந்தியாவிற்கு மொத்தம் 24 ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.