Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தடுப்பூசி முகாம்…. 630 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு நகர வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார சுகாதாரதுறை மேற்பார்வையாளர் சரவணன், மருத்துவர் சங்கர நாராயணன் போன்றோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 3, 4-வது வார்டு மற்றும் 23, 24- வது வார்டு பகுதியில் 630 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். மேலும் இதில் தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சங்கர் போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |