இஸ்ரேல் நாட்டின் பெகாஸஸ் உளவு மென்பொருளை வைத்து பிரான்ஸ் அரசை எதிர்த்தவர்களை உளவு பார்த்தார்கள் என்று கூறப்பட்டதால், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான விசாரணை இன்று துவக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO என்ற நிறுவனம் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்தது. இதனை வைத்து இந்தியா போன்ற 50 நாடுகளின் அரசை எதிர்த்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இது நடந்திருக்கிறது.
எனினும் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த மென்பொருளானது அரசாங்கத்திற்கு மட்டுமே அளிக்கப்படக்கூடியது. தனிநபர்களுக்கு வழங்கப்படாது. எனவே அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பெகாஸஸ் என்ற இந்த மென்பொருளை வைத்து பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையாளர்கள், எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனின் செல்போனும் இதில் அடங்கும். எனவே இதற்கு முடிவு கட்ட இமானுவேல் மேக்ரோன், இன்று திடீரென்று தேசிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இது குறித்து கூறிய செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல், “இந்த விவகாரம் தொடர்பில் அதிபர் தீவிரமாக களமிறங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.