ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாலாந்தரா பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையி வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தெற்கு வாணிவீதி ஊருணியில் சிலர் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் வருவதை பார்த்த மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம், டிராக்டர், டிரைலர் மற்றும் 2 இருசக்கர வாகனத்தையும் பரிமுத்தா செய்து கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய பெருங்குளத்தை சேர்ந்த கலைச்செல்வம், பாலமுரளி கிருஷ்ணா மற்றும் ஞானராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.