ஜெர்மனியில் பெருவெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
ஜெர்மனியில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இவ்வாறு மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளான சமூக இடைவெளியையோ, சுகாதார நடவடிக்கைகளையோ கடைபிடிக்காமல் செயல்படுகிறார்கள்.
இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் ஒருவர் கூறியதாவது, பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் அது மீட்பு பணியை பாதிக்கும் என்றுள்ளார்.