சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் விளம்பட்டி காமராஜர் காலனியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து எம்.சாண்ட் என்ற பெயரில் அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின் ஆற்று மணலை கடத்தி வந்த லாரி மற்றும் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.