Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. வளைந்த மின் கம்பம்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

லாரி மோதியதால் வளைந்த மின் கம்பத்தை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வழியாக வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு கூடலூருக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்த லாரி நடுகூடலூர் பகுதியில் இருக்கும் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இதனால் கம்பத்தில்  இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து விட்டது. மேலும் லாரி மோதியதால் மின்கம்பம் வளைந்து விட்டது.

இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மின் ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை நட்டு சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |