உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுத்தமில்லாமல் உணவு தயாரித்த 8 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதன்பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், வாழை இலையை பயன்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.