அமெரிக்காவில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களுக்கு செலுத்த 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த 3 தடுப்பூசிகளையும் 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான கடைசி முடிவை சி.டி.சி மற்றும் FDA எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.