ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர் உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றல் பொதுமக்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த பதிப்பக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அதிகமாக சிறுவர்களை பதித்து வருகின்றது.
இதனையடுத்து ராமநாதபுரம் அழகன்குளம் செட்டிப்பனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராமல் இருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலும் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.