ஸ்புட்னிக்- வி கொரோனா தடுப்பூசிக்கு 69 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பேராயுதமாக பார்க்கப்படுகிறது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் ரஷ்ய நாட்டின் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கொண்ட இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு 69 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது . இந்நிலையில் சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.