கடந்த 5 நாட்களில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் பதிவாகி வரும் 32C வெப்பநிலை காரணமாக மக்கள் கடற்கரை மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கடற்கரை மற்றும் ஏரிகளில் குளிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 11.30 மணியளவில் டெர்பிஷயரில் உள்ள Trent நதியில் இளம் வயது சிறுவன் ஒருவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
அதேபோல் ஆண் ஒருவர் Stanborough ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் Crosby கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே போல் 15 வயது சிறுவன் ஒருவன் மேற்கு யார்க்ஷயரில் உள்ள நாட்டிங்லி மற்றும் Goole கால்வாயில் குதித்துள்ளான். ஆனால் அந்தச் சிறுவனுடைய சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு 16 பேர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.