Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில பேர் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நாடார் சிவன் கோவில் அருகில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாம் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |