Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தை மனதில் வைத்து” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்த நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவருக்கும், ரத்தின அம்மாளுக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இதனையடுத்து ராஜ்குமார் ரத்தினம்மாளை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாள் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள ராஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |